Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஜிடிபி டேட்டா"வால் சந்தை அதிகரிப்பு!

காலை 10 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (01.06.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.


நேற்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

இந்த நிலையில் சென்ற நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவீத வளர்ச்சி அடைந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 131.71 புள்ளிகள் உயர்ந்து 26,797.83 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.70 புள்ளிகள் உயர்ந்து 8196.80 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 198.00 3.04%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,008.05 2.36%
ஐடிசி 358.95 2.25%
அரவிந்தர் ஃபார்ம் 801.35 2.04%
டிசிஎஸ் 2,621.45 2.03%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் 454.15 -1.20%
டாடா மோட்டார்ஸ் (டி) 311.70 -0.89%
ஹிண்டால்கோ 104.60 -0.62%
ஹெச்டிஎப்சி வங்கி 1,174.75 -0.60%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 149.35 -0.43%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ