Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சல் ஃபண்ட் திட்டத்தில் பிரச்சினை... பணத்தை திரும்ப எடுக்க செபி புதிய கட்டுப்பாடு!

இந்தியாவில் இயங்கி வரும் மியூச்சல் ஃபண்ட் திட்டங்கள் ஏதாவது நிதி சார்ந்த சிக்கலில் சிக்கித் தவிக்கும்போது, அந்த திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்ட முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் வரை மட்டுமே பணத்தை திரும்ப எடுக்க முடியும். இதற்கான வரம்பை இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதித்துள்ளது.

மியூச்சல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் திட்டங்களில் கடன் சார்ந்த சிக்கல், தரக்குறியீடு குறைக்கப்படுவது உட்பட ஏதாவது நிதி சார்ந்த சிக்கலில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் பயத்தின் காரணமாக அதிகளவில் முதலீடு மேற்கொண்ட அனைத்து பணத்தையும் திரும்ப எடுக்க நினைக்கின்றனர். இதனால் மியூச்சல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே மியூச்சல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் திட்டங்களில் நிதி சார்ந்த சிக்கலில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சத்தை மட்டுமே பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்ற நிலையை செபி அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு அதிகபட்சமாக 10 வேலை நாட்கள் மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக செபி தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ