Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹீரோ அதிரடி! இருசக்கர வாகனங்களுக்கான தனி இ-காமர்ஸ் வலைதளம்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தன் இருசக்கர வாகனங்களை தங்களின் வலைதளங்கள் மூலமாகவே விற்கத் தீர்மானித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 2014ல் இருந்து 18 மாதங்களாக இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து தன் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. இதுவரை ஸ்னாப்டீல் மூலம் ஹீரோ நிறுவனம் 5.20 லட்சம் வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஹீரோ தன் வலைதளம் மூலமாகவே தன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கி இருப்பது மற்ற இருசக்கர வாகன உற்பத்தியாளர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இப்படி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வலைதளம் மூலமாகவே வியாபாரத்தைத் தொடர்ந்தால், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்த வாகனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க வேண்டி இருக்கும்.

வாகனங்களை வாங்க விரும்புபவர்கள், ஹீரோ நிறுவனத்தின் வலைதளத்தில் சென்று தேவையான வாகனத்தை தேர்வு செய்து, ரூ. 5000 முன் கட்டணமாக செலுத்தி வாகனங்களை பதிவு செய்து, அருகாமையில் இருக்கும் டீலர்களிடமிருந்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். டீலர்களிடம் வாங்கும் போது வழங்கப்படும் சேவை, கேரன்டி மற்றும் வாரன்டிகள் அனைத்தும் அதே தரத்தில் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ