Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்த 1000 பேரை பணியில் அமர்த்த முடியாது! எல் அண்ட் டி சொல்லும் காரணம் இதுதான்!

இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமான எல் அண்ட் டி இன்ஃபோடெக் கடந்த 2015 மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்த 1000 பேரையும், தற்போது பணியில் அமர்த்த முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
 
 
பணி வழங்க முடியாததற்கு காரணமாக கேம்பஸ் இன்டர்வியூவிற்குப் பின், இரண்டாவது சுற்றாக நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் 1000 பேரும் சரியாக பதிலளிக்கவில்லை என்று ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது.
 
 
இதை எதிர்த்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மாணவர்கள் தமிழக அரசிடம் முறையிட, எல் அன்ட் டி இன்ஃபோடெக் நிறுவனம் மாணவர்களுக்கு 'லெட்டர் ஆஃப் இன்டென்ட்' தான் கொடுத்திருந்தோமே தவிர 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் ' கொடுக்கவில்லை என்று பதிலளித்திருக்கிறது. அதாவது வேலையில் எடுக்க விரும்புவதாகத் தான் சொல்லி இருந்தோமே தவிர வேலைக்கு எடுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ