Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிடிஎஸ்எல் தலைவராக டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நியமனம்!

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிட்டெட் என்று சொல்லப்படும் சிடிஎஸ்எல் அமைப்பின் தலைவராக டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் அவரது நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன் அதன் தலைவராக இருந்த என்.ரங்காசாரியின் பொறுப்பில் இவர் இனி தன் கடமையை ஆற்றுவார்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, 1963லிருந்து இந்திய வருவாய்த்துறை அதிகாரியாகவும், இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாகவும் (பிப்ரவரி 2004-மே 2005) பதவி வகித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையை பேங்க் ஆஃப் இந்தியாவின் புரோபசனரி அலுவலராக (1961-1963) தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜியார்ஜியா, எத்தியோபியா ஆகிய நாடுகளின் ஐஎம்எஃப் ஆலோசகராகவும் இருந்துள்ளார். மேலும் புது தில்லியின் கப்பல் மற்றும் நிதித்துறைகளிலும் தனது கடமையை ஆற்றியுள்ளார். 2005ல் பிசிசிஐ அமைப்பிற்கான தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். மும்பை வருமான வரித்துறையின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

இப்படி பல உச்சங்களையும் தொட்ட கிருஷ்ணமூர்த்தி பேங்க் ஆஃப் இந்தியாவில் ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இன்று சிடிஎஸ்எல் அமைப்பின் செயல்பாடுகளை நெறிப்படுத்தி மேலும் பல திட்டங்களை வளர்ச்சியை நோக்கி விஸ்தரித்து எடுத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ