Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடி, உலோக பங்குகளால் சந்தை ஜிவ்!

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (02.06.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை சென்ற நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவிகித வளர்ச்சி மற்றும் மேக்ரோ எக்னாமிக்ஸ் டேட்டா காரணங்களால் இந்திய சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகம் சர்வதேச சந்தைகள் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச்சந்தைகளும் மந்தமாக வர்த்தகமாகி வந்தன. இந்த நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் ஐடி, உலோகம், சுரங்கம்,  எண்ணெய் & எரிவாயு பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்ததால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடந்தன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 129.21 புள்ளிகள் உயர்ந்து 26,843.14 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 39.00 புள்ளிகள் உயர்ந்து 8,218.95 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

கோல் இந்தியா 307.35 3.42%
யெஸ் பேங்க் 1,049.05 3.06%
ஹிண்டால்கோ 106.05 2.86%
டாடா ஸ்டீல் 340.65 2.56%
ஆக்சிஸ் வங்கி 524.35 2.42%

விலை குறைந்த பங்குகள்

விப்ரோ 540.40 -2.54%
ஹெச்சிஎல் டெக் 721.35 -1.80%
சன் பார்மா 746.75 -1.03%
லூபின் 1,475.35 -1.00%
பார்தி இன்ப்ராடெல் 381.30 -0.95%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close