Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தை உயர்வு!

காலை 10:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (03.06.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த மே மாதம் 24-ம் தேதியில் இருந்து பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலேயும், நிப்டி 500 புள்ளிகளுக்கு மேலேயும் உயர்ந்தன. இந்த நிலையில் இன்று பருவமழை குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக சந்தை அதிகரித்து காணப்படுகிறது. இப்போது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன. கடந்த அக்டோபரில் இருந்த நிலைமையில் பங்குச் சந்தைகள் உள்ளன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 117.92 புள்ளிகள் உயர்ந்து 26,960.86 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 27.80 புள்ளிகள் உயர்ந்து 8,246.05 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஆக்சிஸ் வங்கி 538.95 2.78%
பஜாஜ் ஆட்டோ 2,646.95 2.00%
ஹெச்யூஎல் 885.60 2.00%
டாடா பவர் 73.65 1.94%
ஹீரோ மோட்டோகார்ப் 3,192.85 1.54%

விலை குறைந்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 108.45 -8.52%
பார்தி ஏர்டெல் 360.15 -1.65%
கெயில் 371.70 -1.06%
டிசிஎஸ் 2,623.55 -1.00%
லூபின் 1,461.30 -0.95%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ