Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜனை மறுநியமனம் செய்வது சரியா? சிஐஐ தலைவர் நௌஷத் போர்ப்ஸ் கருத்து

ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் மறுநியமனம் செய்யப்பட்டால், அது சிறந்த முடிவாக இருக்கும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் நௌஷத் போர்ப்ஸ் கருத்து கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன் மீது சுவாமி கூறிய கருத்துகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜனநாயக நாட்டில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது என்ற அளவில்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரகுராம் ராஜன் நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவர் மீண்டும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டால், அது சிறந்த முடிவாக இருக்கும். மத்திய அரசு சரியான சமயத்தில் இது குறித்த முடிவை அறிவிக்கும் என்று நினைக்கிறேன் என்று நௌஷத் போர்ப்ஸ் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ