Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மை காக்க செபி சிறப்பு நீதிமன்றங்கள்!

செபி தரப்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விரைவாக விசாரணை செய்யவும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவும், காலதாமதமாகாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழக்குகளுக்கான முடிவுகளைப் பெறவும் புது டெல்லியில் தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட இருக்கிறது.

ஏற்கெனவே மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் செபி சிறப்பு நீதிமன்றம் உள்ள நிலையில் தற்போது நான்காவதாக தலைநகர் டெல்லியில் அமைக்கப்படுகிறது.
இதற்கு, மோசடிக்காரர்களிடமிருந்து அபராதத்தைப் பெறுவது, அவர்களை கைது செய்வது மற்றும் அவர்களது சொத்துகளை விற்பது ஆகியவை மீதான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு நிதிபதியாக ஒருவர் மட்டுமே மத்திய அரசால் நியமிக்கப்படுவார்.  இதன்மூலம் சந்தை விதிமீறல்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மை காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ