Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்களை இணைப்பதில் செபி மும்முரம்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள ஒரே மாதிரியான முதலீட்டு திட்டங்களை வகை வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.


அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கி வரும் ஓப்பன் எண்டெட் திட்டங்கள் அனைத்தையும் இப்போதுள்ள அளவிலிருந்து பாதியாகக் குறைத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது. தற்போது 4000க்கும் மேலான ஓப்பன் மற்றும் குளோஸ் எண்டெட் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகப் பெயரளவில் வெவ்வேறு திட்டங்களாக இருந்தாலும், ஒரே மாதிரியான முதலீட்டு முறைகளைக் கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகும் சூழல் உண்டாகிறது. எனவே இதனைத் தவிர்க்க, இவற்றை ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடன் செபி நடத்தி வருகிறது.

அப்படி இந்தத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனங்களுக்கு கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தபடி வரிச் சலுகையும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கையை முடித்து காட்டுவதில் செபி தீர்மானமாக இருக்கிறது. ஆனால் இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தராமல் இருக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ