Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது! விண்ணப்பங்களை கவின்கேர்-எம்எம்ஏ வரவேற்கிறது

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதின் ஐந்தாவது பதிப்புக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து விண்ணப்பங்களை கவின்கேர் மற்றும் எம்எம்ஏ வரவேற்கிறது.


இந்தியாவில் சாஷேக்களை அறிமுகப்படுத்தி புதுமை புரட்சியை முன்னோடித்துவமாக தொடங்கிவைத்த காலம் சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்கள் நினைவாக, ஆர்வமிக்க புத்தாக்கமான தொழில்முனைவோர்களை பாராட்டி கௌரவிப்பதற்காக இந்த கார்பரேட் சமுக பொறுப்புறுதி செயல்திட்டம் (CSR) நிறுவப்பட்டது.

இந்திய குடிமக்களாக இருந்து ரூ. 25 கோடிக்கும் மிகைப்படாத வருடாந்திர விற்றுமுதலோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைமையகங்களைக் கொண்டு இயங்கி வரும் தொழில்முனைவோர்கள் இவ்விருதுக்கான போட்டியில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி  ஜூன் 20, 2016 ஆகும். தனித்துவ பண்பு, தரமுயர்த்தும் திறன் மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் விதம் ஆகிய  அம்சங்களின் அடிப்படையில் வல்லுநர்களை உள்ளடக்கிய நடுவர்கள் குழுவால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குறும்பட்டியலுக்கு தேர்வு செய்யப்படும். தனித்துவ தன்மை தரம் உயர்த்தும் திறன் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறும்பட்டியலில் இடம்பெறும்.

கௌரவமிக்க விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்குவதோடு, விருதுபெற்றவர்களின் தொழில்முயற்சிகளை மேம்படுத்தி முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதற்கு, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தும் பணியில் கவின்கேர் மற்றும் எம்எம்ஏ ஆகியவை இணைந்து செயல்படும்.

இந்த சிஎஸ்ஆர் செயல்முயற்சியின் ஒரு பகுதியாக விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் நிதிசார்ந்த எந்தவொரு முதலீடு பங்கினை கவின்கேர்-எம்எம்ஏ செய்யாது. இந்த விருதுகளுக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 7695019123 என்ற மொபைல் எண்ணுக்கு ஒரு  மிஸ்டு கால் செய்யலாம் அல்லது அதிக தகவலைப் பெற www.mmachennnai.org / www.cavinkare.com  என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு +91 9841109712, 9176120306




 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ