Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி சரிந்தது சந்தை!

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (06.06.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

சர்வதேச சந்தை மந்த நிலையில் வர்த்தகமானதால் இந்திய பங்குச் சந்தைகள் ப்ளாட் ஆக காலை நேரத்தில் வர்த்தகம் ஆனது. இந்த நிலையில் நாளை ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கூட்டம் நடைபெறுவதையொட்டி வர்த்தகத்தின் இடையே சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் காணப்பட்டது. இறுதியில் சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 65.58 புள்ளிகள் சரிந்து 26,777.45 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.75 புள்ளிகள் சரிந்து  8201.05 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பேங்க் ஆப் பரோடா 143.45 2.32%
யெஸ் பேங்க் 1,064.70 1.46%
டாடா மோட்டார்ஸ் 460.50 1.44%
ஹிண்டால்கோ 106.85 1.23%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,227.30 1.19%

விலை குறைந்த பங்குகள்

பார்தி ஏர்டெல் 348.75 -2.62%
பார்தி Infratel 375.85 -2.26%
டெக் மஹிந்திரா 539.60 -2.19%
லூபின் 1,419.35 -2.12%
ஆக்சிஸ் வங்கி 532.85 -1.81%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP