Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதிக்கொள்கை கூட்டம்: இந்திய பங்குச்சந்தைகள் அதிகரிப்பு!

காலை 10 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (07.07.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தை மந்த நிலையில் வர்த்தகமானதால் நேற்றைய இந்திய பங்குச் சந்தைகள் காலை நேரத்தில் ப்ளாட் ஆக வர்த்தகம் ஆனது. அதன்பின்னர் இன்று நடைபெற உள்ள ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கூட்டத்தையொட்டி முதலீட்டாளர்கள் பங்குகள் விற்பனை செய்யத் தொடங்கியதால் இந்திய சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்தன.

இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 96.49 புள்ளிகள் உயர்ந்து 26,875.04 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.60 புள்ளிகள் உயர்ந்து 8232.65 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 464.85 2.32%
எஸ்பிஐ 202.80 1.96%
ஐசிஐசிஐ வங்கி 247.45 1.62%
ஓஎன்ஜிசி 213.85 1.45%
ஹெச்யூஎல் 888.90 1.09%

விலை குறைந்த பங்குகள்

அரவிந்தர் ஃபார்ம் 772.30 -0.88%
ஹெச்டிஎப்சி 1,244.85 -0.54%
லூபின் 1,411.85 -0.53%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,143.65 -0.24%
அதானி துறைமுகங்கள் 203.35 -0.17%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ