Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இன்று நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை.

ரிசர்வ வங்கியின் நிதிக் கொள்கையின் மறு சீராய்வு அறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இதில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என அறிவித்தார்.

ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியான ரெபோ விகிதம் 6.50 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' 6 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது.

சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4% என்கிற அளவிலேயே உள்ளது.

எஸ்எல்ஆர் எனப்படும் வங்கிகள் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் விகிதம் 21.25% என்ற அளவிலும் தொடர்கிறது.

வங்கி வட்டி விகிதம் 7% என்ற அளவிலும் தொடர்வதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ