Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செபி தலைவர் யு.கே சின்ஹாவின் பதவிக் காலம் நீட்டிப்பு!

இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் தற்போதைய தலைவர் யு.கே சின்ஹாவின் பதவிக் காலம் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சின்ஹா முதல் முறையாக 2011 பிப்ரவரி மாதம் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மார்ச் 2017 வரை பதவியில் நீட்டிக்க அரசு அனுமதித்துள்ளது.

பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சின்ஹா பதவியில் நீட்டிப்பதே சந்தையை வழிநடத்த சரியாக இருக்கும் என்பதால் இரண்டாவது முறையாக சின்ஹாவின் பதவி காலத்தை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ