Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி கவர்னராக மறுநியமனம்? ஊடகங்களுக்கு ரகுராம் ராஜன் பதில்

இன்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுடன் ரகுராம் ராஜன் பேசுகையில், "வரும் செப்டம்பர் மாதத்துடன் எனது பணிக்காலம் முடிவடைகிறது. அதன் பின்னர் எனது பணிக்காலம் நீட்டிக்கப்படும் என்பது ஊடக விவாத பொருளாக ஆகி உள்ளது. பல்வேறு யூகங்களும் இது தொடர்பாக வெளியாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக இப்போதே ஏதாவது கூறி ஊடகங்களின் மகிழ்ச்சியை குலைக்க விரும்பவில்லை. எது நடந்தாலும், அது நிகழ்ந்தபின் ஊடகங்களுக்கு நிச்சயம் தெரியவரும். எனது மறுநியமன விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அளித்துள்ள விளக்கமே போதுமானதாகக் கருதுகிறேன்" என்று பேசினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ