Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜானெட் யெல்லனால் இந்திய சந்தை அதிகரிப்பு!

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (06.06.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

வங்கிக் கொள்கைக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை என மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதுமட்டுமின்றி அமெரிக்க பொருளாதாரம் பாசிட்டிவ்வாக இருப்பதால், வட்டி விகிதத்தை உயர்த்துவது உறுதி என்ற போதிலும் அதற்கு எவ்வித காலக்கெடுவையும் அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜானெட் யெல்லன் அறிவிக்கவில்லை. நேற்று அவர் வெளியிட்டிருந்த இந்த அறிக்கை அமெரிக்க பங்குச்சந்தைகளில் மட்டுமில்லாது ஆசிய பங்குச்சந்தைகளிலும் ஒரு ஊக்கத்தை அளித்திருந்தது.

இந்த நிலையில், வாரத்தின் 2-வது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.  இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 232.22 புள்ளிகள் உயர்ந்து 27,009.67 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 65.40 புள்ளிகள் உயர்ந்து 8266.45 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

எஸ்பிஐ 210.15 5.66%
ஐசிஐசிஐ வங்கி 254.10 4.35%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,334.95 3.34%
ஹிண்டால்கோ 109.50 2.48%
அம்புஜா சிமென்ட்ஸ் 234.25 2.34%

விலை குறைந்த பங்குகள்

பிபிசிஎல் 976.25 -1.81%
இன்டஸ் இன்ட் வங்கி 1,109.90 -1.06%
அரவிந்தர் ஃபார்ம் 771.40 -0.99%
டாடா பவர் 73.50 -0.94%
எய்கர் மோட்டார்ஸின் 18,828.05 -0.88%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ