Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகள்!

காலை 9:55 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (08.06.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.

ரிசர்வ் வங்கியின் வட்டிக் கொள்கை அறிவிப்பு சந்தையின் எதிர்பார்ப்புக்கு இணக்கமாக அமைந்ததால் பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. மேலும், அமெரிக்க பொருளாதார நிலை குறித்து தெளிவான கண்ணோட்டத்துக்கு வரும் வரை அங்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படமாட்டாது என அந்நாட்டு மத்திய வங்கி அறிவிப்பால் பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டு வரத்தும் கணிசமாக இருந்தது.

இதனால் நேற்றைய சந்தை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் தொடங்கிய வர்த்தகம் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்து வருவதால் சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.78 புள்ளிகள் உயர்ந்து 27,044.25 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.75 புள்ளிகள் உயர்ந்து 8272.20 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பார்தி ஏர்டெல் 357.70 2.45%
ஓஎன்ஜிசி 216.60 1.71%
அம்புஜா சிமென்ட்ஸ் 237.00 1.17%
டாடா மோட்டார்ஸ் 468.40 1.16%
லார்சன் 1,505.00 1.15%

விலை குறைந்த பங்குகள்

ஜீ மகிழ்விக்க 455.45 -1.59%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,017.50 -1.48%
கோடக் மகேந்திரா 764.00 -1.04%
யெஸ் பேங்க் 1,058.15 -0.76%
கோல் இந்தியா 305.50 -0.75%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ