Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6% ஆக குறையுமாம்! உலக வங்கி கணிப்பு

2016 ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவிகிதம் ஆக குறைந்து இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

'Global Economic Prospects' எனும் தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2016 ம் ஆண்டில் 0.2 சதவிகிதம் குறைந்து 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜனவரி மாதம் நடத்திய ஆய்வில் இது 7.8 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது அதிகரித்து காணப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவிகிதமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைப் பொறுத்தவரை 2016 ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆய்வில் இது 2.9 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ