Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதம் எதிர்பார்ப்பால் தங்கம் விலை அதிகரிப்பு!

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை குறைவதால் தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே குறைந்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவாக சர்வதேச சந்தையில்  அதிகரித்து காணப்படுகிறது. உலக பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதாக உலக வங்கி கணிப்பு மற்றும் கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான பேரொல் டேட்டா போன்ற காரணங்களால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.  அடுத்த வாரம் எப்ஒஎம்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை இன்று (ஜூன் 8-ம் தேதி) சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலை நேர நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,780-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.22,240-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.29,730-க்கும் விற்பனையாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ