Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமேசான் அதிரடி; ப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலுக்கு வந்தது சிக்கல்!

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, "US India Business Council’s global leadership awards" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவில் சிறப்பாக இயங்கி வரும் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் மற்றும் சன் பார்மா நிறுவனர் திலிப் சங்வி-க்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இந்த விருதினை பெற்றுக்கொண்ட அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் பேசுகையில், "3 பில்லியன் டாலர் (ரூ.20,000 கோடி) அளவில் இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே 2 பில்லியன் டாலருக்கு முதலீடுகள் மேற்கொண்டுள்ளது. இப்போது கூடுதலாக 3 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் இந்தியாவில் 5 பில்லியன் டாலர் அளவிற்கு அமேசான் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது" என்று பேசினார்.

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான திகழும் அமேசான், இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பது ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ