Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் இவர்கள்தான்!

போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் 2வது இடத்திலும், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜேனட் எல்லன் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 


இந்திய பெண்மணிகளில் ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சாரியா 25வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குநரான சந்தா கோச்சார் 40வது இடத்திலும், பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் ஷா  77வது இடத்திலும், இந்துஸ்தான்டைம்ஸ் நிறுவன தலைவர் சோபனா பார்தியா 93வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ