Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தைகள் பலவீனத்தால் இந்திய சந்தை சரிந்தது!

காலை 10:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (09.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் சந்தை சற்று இறக்கத்துடன் ப்ளாட் ஆக வர்த்தகமானது. இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்து வருவதாலும் சந்தை இறக்கத்துடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 163.32 புள்ளிகள் சரிந்து  26,851.62 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 44.00 புள்ளிகள் சரிந்து  8229.05 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

என்டிபிசி 151.45 2.23%
ரிலையன்ஸ் 969.45 1.61%
பிபிசிஎல் 995.45 1.56%
டாடா பவர் 76.50 1.39%
ஓஎன்ஜிசி 218.70 1.37%

விலை குறைந்த பங்குகள்

இன்போசிஸ் 1,194.65 -3.51%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,072.55 -2.08%
ஹெச்யூஎல் 881.35 -1.77%
ஹெச்டிஎப்சி 1,244.65 -1.41%
ஐடிசி 358.30 -1.24%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ