Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடிஎஃப் சொத்து மதிப்பு 7 மடங்கு அதிகரிப்பு!

இடிஎஃப்-ல் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இடிஎஃப் நிர்வகித்து வரும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிரடியாக அதிகரித்துள்ளது.


 

கடந்த மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக இடிஎஃப்-ன் சொத்து மதிப்பு 7 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் நிப்டி 50 இன்டெக்ஸ்-ல் இடிஎஃப் சொத்து மதிப்பு 7 மடங்கு உயர்ந்து ரூ.8,533 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ.1,251 கோடியாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ