Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்போன் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை விதிக்க ‘டிராய்’ கோரிக்கை!

கால் டிராப் விவகாரத்தில்  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செல்போன் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையில் ‘டிராய்’ சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டு இருக்கிறது.

செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று இணைப்பு துண்டிக்கப்பட்டால் (கால் டிராப்) சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் விதிமுறைகளை டிராய் வகுத்தது.  அதன்படி ஒவ்வொரு முறை ‘கால் டிராப்’ ஆகும் போது தலா 1 ரூபாயும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 ரூபாயும் வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்கள் வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இந்த நிலையில், ‘கால் டிராப்’ விவகாரத்தில் தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று டிராய் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செல்போன் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 கோடி வரையும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் ‘டிராய்’ சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ