Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஐபி டேட்டாவால் முதலீட்டாளர்கள் உஷார்; சென்செக்ஸ் சரிந்தது!

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (09.06.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்ததாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்து வந்ததாலும் சந்தை இறக்கத்திலேயே காணப்பட்டது. இதுமட்டுமின்றி ஐஐபி டேட்டா மற்றும் எப்ஒஎம்சி மீட்டிங் இருப்பதால் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகத்தில் ஈடுபட்டதால் சந்தை ஏற்றம் காணாமல் இறக்கத்திலேயே முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 257.20 புள்ளிகள் சரிந்து 26,763.46 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 69.45 புள்ளிகள் சரிந்து  8203.60 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஓஎன்ஜிசி 220.65 2.27%
கோல் இந்தியா 313.00 2.02%
என்டிபிசி 151.05 1.96%
ரிலையன்ஸ் 971.15 1.79%
பிபிசிஎல் 997.45 1.77%

விலை குறைந்த பங்குகள்

இன்போசிஸ் 1,185.50 -4.25%
அம்புஜா சிமென்ட்ஸ் 231.90 -2.64%
ஹீரோ மோட்டோகார்ப் 3,086.70 -2.63%
அரவிந்தர் ஃபார்ம் 752.90 -2.55%
ஐடிசி 354.10 -2.40%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close