Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக்; கவின்கேர் அறிமுகம்

இந்தியாவிலேயே பால், பழம் மற்றும் தேன் ஆகிய மூன்றாலான முதல் ஆரோக்கிய பானத்தை கவின்கேர் நிறுவனம் சென்னையில் இன்று (09.06.16) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கவின்கேர் இன்று கவின்'ஸ் ப்ரூட் மில்க் ஷேக் என்னும் ஆரோக்கிய குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டிலேயே பால், பழம் மற்றும் தேனாலான முதல் குளிர் பானமாக கவின்'ஸ் ப்ரூட் மில்க் ஷேக் திகழும் என்று இந்நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக்கை அறிமுகப்படுத்திப் பேசுகையில், கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் திரு சி.கே. ரங்கநாதன், "இது மாம்பலம், ஆப்பிள் மற்றும் கொய்யா ஆகிய மூன்று பழ வகைகளில் கிடைக்கும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படப் பாலில் இருந்து இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பாலில் பழமும் தேனும் சேரும் போது அதில் நார்ச்சத்து, நோய் கிருமி எதிர்ப்பு சக்தி, ஆண்டியாக்ஸிடண்ட்கள் ஆகியவை கிடைக்கின்றன.

கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஐஎஸ்ஓ 22000 (ISO 22000) மற்றும் ஏற்றுமதி தர அங்கீகாரம் பெற்ற உற்பத்தியகத்தில் தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பாவின் நவீன யுஹெச்டி (UHT) தொழில்நுட்பத்துடன் நுண்ணுயிரற்ற முறையில் பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. நுண்ணுயிர் நீக்கப்பட்டுள்ளதால் கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதன் விலை எல்லோரும் வாங்கும் வண்ணம் ரூபாய் 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தரமான மற்றும் புதுமையானப் பொருட்களை தயாரித்து அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன் பெரும் வகையில் குறைந்த விலையில் விற்பதை நாங்கள் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில் இன்று நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் ஒரு புதுமையான பழ பானமாகும். இந்தியாவிலேயே பால், பழம் மற்றும் தேன் ஆகிய மூன்றும் கலந்து உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ள ஒரே ஆரோக்கிய பானம் என்ற சிறப்பை இது பெறுகிறது. இதில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினந்தோறும் பருகலாம்,” என்று கூறினார்.

மேலும் பால் மற்றும் பால் சார்ந்தப் பொருட்கள் தயாரிப்பில் கவின்கேர் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும். மில்க் ஷேக் தயாரிப்பிற்கு மட்டும் ஏற்கனவே ரூபாய் 40 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், ப்ரூட் மில்க் ஷேக் தயாரிப்பிற்கு மேலும் ரூபாய் 30 கோடிகள் முதலீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு 100 மில்லி கிராம் ப்ரூட் மில்க் ஷேக்கிலும் 1 கிராம் கொழுப்பு, 18 கிராம் கார்போஹைட்ரேட்,   2.3 கிராம் புரதம்,   80-90 மில்லி கிராம் கால்சியம் 60-75 மில்லி கிராம் பாஸ்பரஸ், மற்றும் 90-95 Kcal என்ற அளவில் கலோரியும் உள்ளன.

கவின்’ஸ் ப்ரூட் மில்க் ஷேக் முதலில் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து முன்னணி அங்காடிகளிலும் சூப்பர் மார்கெட் மற்றும் சில்லறைக் கடைகளிலும், கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் இந்த நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியா முழுவதும் இந்த பானம் வினியோகிக்கப்படும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ