Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஐபி எதிர்பார்ப்பால் இறக்கத்தில் சந்தை!

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (10.06.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

கடந்த இரண்டு நாட்களாகவே ஐஐபி டேட்டா மற்றும் எப்ஒஎம்சி மீட்டிங் போன்ற காரணங்களால் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இன்றும் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஐஐபி டேட்டா இன்று மாலை வெளியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் செய்து வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 127.71 புள்ளிகள் சரிந்து 26,635.75 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.55 புள்ளிகள் சரிந்து  8170.05 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 115.30 3.97%
யெஸ் பேங்க் 1,063.30 2.24%
பி.எச்.இ.எல் 123.75 2.10%
ஏசிசி 1,555.65 1.48%
அம்புஜா சிமென்ட்ஸ் 235.30 1.47%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 312.65 -3.29%
டாடா ஸ்டீல் 334.40 -2.24%
டாடா மோட்டார்ஸ் 456.95 -2.18%
கோல் இந்தியா 306.65 -2.03%
எஸ்பிஐ 205.95 -1.91%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ