Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி

தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சென்னா மற்றும் மென்தாயில் இந்த வாரம், எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து KEDIA COMMODITY நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன் விளக்குகிறார்.
 
 
தங்கம்!
 
தங்கம் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து விலை உயர்ந்து வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது. கடந்த வெள்ளியன்று (ஜூன் 3) வெளியான ஜாப் டேட்டா சற்று அதிகமாக இருந்த காரணத்தினாலும், FOMC வரும் கூட்டத்தொடரில் வட்டி விகித உயர்வு இருக்காது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரும் ஜூன் 14-15 அன்று கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் எனவும், அதன் பின்னர் முடிவுகள் வெளியாகலாம் என்றும் நம்பப்படுகின்றன.
 
இதனால் வரும் வாரங்களில் தங்கம் விலை சற்று உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்திய பொருட்சந்தையில் (MCX) ரூ.29,400 என்ற நிலை வரும்போது வாங்கலாம். ரூ.30,300 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. தங்கத்தைப் பொறுத்தவரை BUY on Dip வழிமுறையை பின்பற்றவும். தங்கத்தை ரூபாய் 29,400-க்கு வாங்கவும். வரும் வாரங்களில் ரூபாய் 30,500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூபாய் 28,700 வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி!
 
வெள்ளியைப் பொறுத்தவரை வரும் வாரத்தில் விலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஜூன் 14-15 தேதிகளில் கூடும் FOMC கூட்டத்தொடரில் இம்மாதம் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் வட்டி விகிதம் உயர்வு தள்ளிபோக கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெள்ளி வரும் வாரத்தில் 18.40 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய சந்தையில் வெள்ளியை ரூ.40,200-க்கு வாங்கவும். வரும் வாரங்களில் ரூபாய் 42,500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை கடந்த இரு வாரங்களாக ரு.3,300 முதல் ரூ.3,440 வரையில் வர்த்தகம் ஆகிக் கொண்டேயிருக்கிறது. கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை நேர்மறையாகதான் இருக்கும் என்று எதிர்பார்ப்புள்ளது. இதற்கான காரணம் வெப்ப மண்டல புயல் இம்மாத இறுதியில் மெக்சிகோ வளைகுடாவை தாக்கலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் 54 டாலர் வரை உயரலாம். இந்திய சந்தையில் கச்சா எண்ணெய்யை ரூபாய் 3,250-க்கு வாங்கவும். வரும் வாரங்களில் ரூபாய் 3,500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூபாய் 3,140 வைத்துக்கொள்ளவும்.

இயற்கை எரிவாயு!

இயற்கை எரிவாயு கடந்த இரு வாரங்களாக விலை உயர்ந்து வர்த்தகம் ஆகி வருகிறது. கடந்த 9 மாத காலத்தில் இல்லாத உச்ச விலையான 175/BMTU வியாழன் அன்று எட்டியது. இந்த ஆண்டு இறுதியில் லா-நினா எனும் குளிர் சலனம் ஏற்படக்கூடும் என்று வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வரும் வாரங்களில் 190/BMTU வரை செல்ல வாய்ப்பு உள்ளது. வரும் வாரங்களில் BUY on DIP வழிமுறையை பின்பற்றவும். இயற்கை எரிவாயு ஜூன் மாத கான்ட்ராக்ட் ரூ.168-க்கு வாங்கவும். வரும் வாரங்களில் ரூபாய் 185 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூபாய் 160 வைத்துக்கொள்ளவும்.

சென்னா:

உள்நாட்டு தேவை அதிகரித்து உள்ளதால் சென்னாவின் விலை எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றால் போல் உயர்ந்து வருகிறது. கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. உள்நாட்டு தேவை மிகவும் அதிகம் உள்ளதால் சுமார் 13,000 டன் சென்னா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் 6,000 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னா  வரும் வாரங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சென்னாவை ரூ.6,700-க்கு வாங்கவும். வரும் வாரங்களில் ரூபாய் 7,200 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூபாய் 6,400 வைத்துக்கொள்ளவும்.

மென்தா ஆயில்!

மென்தா ஆயிலின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. உள்நாட்டு தேவை குறைவு, கையிருப்பு அதிகம் மற்றும் அதிக அளவில் சாகுபடி போன்ற காரணங்களால்  விலை வீழ்ச்சியுடன் வர்த்தகம் ஆகி வருகிறது. மென்தா ஆயில் ரூ.850-க்கு கீழ் வர்த்தகம் ஆகும்பட்சத்தில் அடுத்த இலக்கு ரூ.820 வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மென்தா ஆயிலை ரூ.860-க்கு விற்கவும். வரும் வாரங்களில் ரூ.820 வரை குறைய வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.880 வைத்துக்கொள்ளவும்.

சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ