Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி, ஜெ., சந்திப்பு: பயிர்வாரி முறை சட்டம் இயற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

பிரதமர் மோடியை சந்திக்கச் செல்கிற முதல்வர் ஜெயலலிதா, பயிர்வாரி முறைக்குச் சட்டம் இயற்ற வலியுறுத்த ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சி.வையாபுரி கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலத்தடி நீர் தாழ்ந்து போவதைக் கட்டுப்படுத்தத் தவறியதால்தான், பயிர்வாரி முறையைக் கட்டாயமாக்க மத்திய சட்டம் ஒன்று அவசியமாகிறது. அந்தச் சட்டம் மாநிலங்களையும் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

பாசன நடவடிக்கைகள் மாநில அதிகாரம் என்றாலும், மாநிலங்களுக்கு உள்ளேயும் கீழ்மடைப் பாசன உரிமைகள் (Riparian Right) முறையாகக் கடைப்பிடிக்க கண்காணிப்புமிக்க நீர் மேலாண்மை விதிகள் பின்பற்றப்பட்ட வேண்டும். அப்போதுதான் வேளாண்மையில் பல்வகை உணவுப் பண்டங்களின் உற்பத்திகளுக்கும் தடங்கல் ஏற்படாது. பருப்பு எண்ணெய் வித்துக்களின் வகைகளின் இறக்குமதிக்கு அவசியம் வராது.

இது கர்நாடகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களுக்குமே பொருந்தக்கூடியதுதான். ஆனால், காவிரியில் நீர்பிடிப்புப் பகுதிகள் கர்நாடகம், கேரளம் என பரந்துள்ளன. காவிரியில் வரம்புமீறி பாசனத்திட்டங்களை பாசன உரிமை கொண்ட தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அனுமதியைப் பெறாமலும் பாசன உரிமை கொண்ட கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாததால் மத்திய அரசு நிதி ஒதுக்குவதற்கு மறுத்தாலும்-
கர்நாடக அரசு தமது மாநில நிதி ஆதாரங்களை வைத்தே ஏராளமான புதிய பாசன திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுவிட்டன.

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பில் கர்நாடகத் தரப்புக்கு 11 லட்சம் ஏக்கர் என்று இருந்தது. தற்போது 28 லட்சமாக உயர்ந்துவிட்டது. அங்கேயும் தமிழ்நாட்டைப் போல நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு நிலங்களிலிருந்தும் வெளியேறும் காற்றில் கலக்கும் ஈரப்பதம் (Humidity) இல்லாததால் மேகங்களை ஈர்க்காமல் மலைகளுக்கும் கடல்களுக்கும் தள்ளிவிடுகிறது. அங்கேயும் வறட்சி நிலவுகிறது.
தாகத்தை அடக்க தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது, விவசாயம் எப்படி நடக்கும். சிக்கனப் பாசனத்திற்காக சொட்டுநீர்ப் பாசன நடவடிக்கைகளும் இன்றைய நிலையில் பொய்த்து வருகின்றன.

காரணம்: 1000 அடிக்கும் மேலான குழாய்களிலிருந்து வரும் தண்ணீரும் வற்றிவிட்டது.
இப்படிப்பட்ட சோதனைகளை வெல்வதற்கு நிலத்தடி நீர் தாழ்ந்து போகாமல் இருக்க பயிர்வாரி முறைக்கு மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மோடியுடனான தமது சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ