Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சில்லறைப் பணவீக்கம் 5.76% ஆக அதிகரிப்பு

நம் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 5.76 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள்களுக்கான விலை அதிகரித்ததையடுத்து நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 5.76 சதவீதமாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டு மே மாதத்தில் 5.01 சதவிகிதமாக காணப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது சென்ற மே மாதத்தில் இறைச்சி, மீன், பால், உணவு தானியங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்பட்டது. இருப்பினும், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கான பணவீக்கம் குறைந்தே இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ