Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டுமானத்தில் இருக்கும் கட்டடங்களுக்கு சேவை வரி ரத்து!

ட்டுமானத்தில் இருக்கும் கட்டடங்களுக்கு இனி சேவை வரி கிடையாது என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்டடம் வாங்கும் பலர் சேர்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனுவில் "சேவை வரி விதிப்பதற்க்கு சேவை உறுப்பின் ஈடுபாடு ஒன்று இருக்க வேண்டும், ஆனால் இந்த விஷயத்தில், கட்டடம் வாங்குபவருக்கும், விற்ப்பவருக்குமான ஒப்பந்தமே ஆகும், இதில் சேவை உறுப்பு இல்லாததால் வரி விதிப்பது சரியாக இருக்காது, எனவே வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் முரளீதர் மற்றும் விபு பக்ரு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவுக்கு தீர்ப்பளித்த நீதிபதிகள், கட்டுமானத்தில் இருக்கும் ஒரு திட்டத்தின் மதிப்பை சரியாக கணிக்க முடியாது என்பதால், அவற்றுக்கு சேவை வரி கிடையாது என்றும், விற்ப்பவரிடம் விருப்பு இடம் கேட்கும் மக்களுக்கு மட்டும் சேவை வரி விதிக்கலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 2012 ஆம் ஆண்டிற்க்கு பிறகு கட்டடங்கள் வாங்கியவர்களுக்கு 6% வட்டியுடன் வரித் தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். சேவை வரி, மொத்த சொத்துக்கும் விதிக்கப்படுவது இல்லை, இதை 2 விதமாக கணக்கிடலாம்.

1) மொத்த சொத்து மதிப்பிலிருந்து, நிலத்தின் மதிப்பு மற்றும் கட்டுமான பொருட்களின் மதிப்பு கழிக்கப்பட்டு மீதமிருக்கும் தொகைக்கு வரி விதிக்கப்படும்.

2) நிலத்தின் மதிப்பை மொத்த சொத்து மதிப்பில் 75% ஆக கருதி, மீதமிருக்கும் 25% தொகை (கட்டுமான தொகை) மீது 15% வரி விதிக்கப்படும். (சுமாராக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சுமார் 3.75 லட்சம் சேவை வரியாக வரும்)

கட்டடம் வாங்குபவர்கள் 15% சேவை வரி கட்ட வேண்டும் என்பது சட்டம், இந்த தொகையை கட்டுமான தொழிலில் இருப்பவர் தனது வாடிக்கையாளரிடமிருந்து வாங்கி அரசுக்கு வரியாக கட்ட வேண்டும். இந்த தீர்ப்பினால், தன்னிடம் கட்டடம் வாங்குபவரிடம் கட்டுமான தொழிலில் இருப்பவர் சேவை வரி வாங்க முடியாது, ஆனால் வரியை அவர் அரசுக்கு செலுத்தாமல் இருந்தால் வரி ஏய்ப்பு புகாருக்கு ஆளாகக் கூடும், இது அவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்கும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, கட்டுமானப் பணியின் தொகையை சரியாக கணக்கிடுவது சாத்தியமில்லை என்பதால் அந்த வேலை முடியும் வரை சேவை வரி விதிக்கக் கூடாது. கட்டுமானம் என்பது, அசையா சொத்தின் உருவாக்கம் என்பதாலும், நிலம் வாங்குவதற்க்குச் சமம் என்பதாலும் அது மாநில விவகாரமாக கருத முடியும், எனவே மத்திய அரசால் அதற்கு வரி விதிக்க முடியாது.

இந்த தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்யும் என பல வல்லுனர்கள் கூறியுள்ளனர், ஆனால் அதுவரை இந்தத் தீர்ப்பை முன்னிறுத்தி, பலரும் சேவை வரி கட்டாமல் இருப்பார்கள். எனினும் இந்த தீர்ப்பு டில்லியில் மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


பா. அபிரக்ஷன்

(மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ