Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க பெடரல் வங்கியால் சென்செக்ஸ் ப்ளாட்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (14.06.16) மாலை நேர வர்த்தகத்தின்போது 100 புள்ளிகள் அதிகரித்து இறுதியில் ப்ளாட் ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கம் முதலே மந்த நிலையிலும், இறக்கத்திலும் வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் இன்று 100 புள்ளிகள் வரை சரிவுடன் காணப்பட்ட சென்செக்ஸ் மாலை நேர வர்த்தகத்தின் இறுதியில் எழுச்சியுடன் அதிகரித்து இறுதியில் மைனஸ் 1.06 புள்ளிகளாக முடிவடைந்தது. இன்று இரவு அமெரிக்க பெடரல் வங்கியின் எப்ஒஎம்சி கூட்டம் நடைபெறுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அச்ச உணர்வுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் ப்ளாட் ஆக வர்த்தகம் மேற்கொண்டன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1.6 புள்ளிகள் குறைந்து 26,395.71 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.75 புள்ளிகள் சரிந்து  8108.85 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

சிப்லா 482.70 2.99%
அதானி துறைமுகங்கள் 208.60 2.96%
எஸ்பிஐ 207.70 2.92%
பேங்க் ஆப் பரோடா 148.80 1.85%
எய்கர் மோட்டார்ஸின் 18,753.65 1.66%

விலை குறைந்த பங்குகள்

அல்ட்ராடெக் சிமெண்ட் 3,321.90 -2.24%
ஜீ எண்டர்டெயின் 455.55 -1.77%
BPCL 991.15 -1.73%
அம்புஜா சிமென்ட்ஸ் 233.90 -1.45%
ஹீரோ மோட்டோகார்ப் 3,005.80 -1.01%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ