Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ வங்கி இணைப்பு ஒப்புதலால் சந்தை அதிகரிப்பு!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (15.06.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், பணவீக்கம் உயர்வாலும் நேற்றைய வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன.

இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தன. அமெரிக்க பெடரல் வங்கியின் நேற்றைய கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதால் பாசிட்வாக வர்த்தகமாகின. இந்த நிலையில் தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் எஸ்பிஐ வங்கி இணைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன.


இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 330.63 புள்ளிகள் உயர்ந்து 26,726.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 97.75 புள்ளிகள் உயர்ந்து 8206.60 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

எஸ்பிஐ 216.05 4.02%
என்டிபிசி 154.15 3.98%
லார்சன் 1,513.80 3.65%
பார்தி ஏர்டெல் 351.90 2.70%
மாருதி சுசூகி 4,209.60 2.56%

விலை குறைந்த பங்குகள்

பார்தி இன்ப்ராடெல் 365.10 -4.12%
அரவிந்தர் ஃபார்ம் 740.65 -1.27%
அதானி துறைமுகங்கள் 207.00 -0.77%
எய்கர் மோட்டார்ஸின் 18,637.20 -0.62%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,086.75 -0.34%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ