Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ துணை வங்கிகள் இணைப்புக்கு அரசு அனுமதி!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது தொடர்பான ஒப்புதலை அரசு அனுமதித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பது தொடர்பான பரிந்துரைக்கு எஸ்பிஐ ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் எஸ்பிஐ மற்றும் அதன் 5 சிறிய வங்கிகளோடு பாரதிய மகிளா வங்கியையும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது தொடர்பான முடிவினை இன்று அரசு அறிவித்துள்ளது. அதில் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய மகிளா வங்கி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

இந்த 5 வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகள் மட்டும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவையாகும்.
எஸ்பிஐ-க்கு மட்டும் நாடு முழுவதும் 16,500 கிளைகள் உள்ளன. இதில் 191 கிளைகள் 36 நாடுகளில் உள்ளன. இந்த நிலையில் வங்கி இணைப்பு மூலம் எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 22,500 ஆக உயர்ந்துள்ளது. ஏடிஎம்-களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி இணைப்பு நடவடிக்கையால் இன்றைய (15.06.16) பங்குச்சந்தையில் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் 19 சதவிகிதமும், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் பங்குகள்  20 சதவிகிதமும் அதிகரித்து காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ