Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாப நோக்கில் பங்குகளை விற்றதால் சந்தை சரிந்தது!

காலை 10.30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (16.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமான நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதாலும் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடன் முடிந்தன. இதுமட்டுமின்றி தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் எஸ்பிஐ வங்கி இணைப்புக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன.

இந்த நிலையில் இன்று முதலீட்டாளர்கள் பங்குகளை லாபநோக்கில் விற்பனை, சர்வதேச மற்றும் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 289.23 புள்ளிகள் சரிந்து 26,435.34-ஆகவும், நிப்டி 91.90 புள்ளிகள் சரிந்து 8,114.30-ஆகவும் முடிந்தன

விலை அதிகரித்த பங்குகள்

கெயில் 381.65 1.17%
ஹிண்டால்கோ 116.40 0.56%
பேங்க் ஆப் பரோடா 152.65 0.56%
எஸ்பிஐ 216.95 0.42%
டாடா ஸ்டீல் 331.35 0.33%

விலை குறைந்த பங்குகள்

பார்தி இன்ப்ராடெல் 353.35 -3.22%
ஐசிஐசிஐ வங்கி 241.55 -2.58%
மாருதி சுசூகி 4,113.15 -2.29%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,287.85 -2.26%
பார்தி ஏர்டெல் 344.60 -2.07%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ