Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமான போக்குவரத்து கொள்கையில் மாற்றம்; அமைச்சரவை அனுமதி!

தேசிய விமான போக்குவரத்து கொள்கையில் சில மாற்றத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


இந்திய விமான நிறுவனங்கள் ஐந்து வருட அனுபவம் மற்றும் 20 விமானங்கள் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு போக்குவரத்தை தொடங்க முடியும். ஏற்கெனவே பல காலமாக இருக்கும் விமான நிறுவனங்கள் இந்த விதி இருக்க வேண்டும் என்று கூறின. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அந்த விதியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் புதிய கொள்கையில் 5/20 விதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதன்படி இந்திய விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்க 5 வருடம் என்பது கட்டாயம் கிடையாது. ஆனால், அதே சமயத்தில் ஒரு விமான நிறுவனத்திடம் 20 விமானங்கள் அல்லது 20 சதவிகித விமானங்கள் இதில் எது அதிகமோ அந்த எண்ணிக்கையிலான விமானங்களை உள்நாட்டு போக்கு வரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் 30 நிமிட பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.1,200-ம் ஒரு மணி நேர பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.2,500-ம் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ