2 water Heater | வை-பை வாட்டர் ஹீட்டர்; வி-கார்டு அறிமுகம்
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வை-பை வாட்டர் ஹீட்டர்; வி-கார்டு அறிமுகம்

நவீன வசதிகளுடன் கூடிய `வெரானோ’ என்கிற புதிய வகையிலான வாட்டர் ஹீட்டரை வி-கார்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் வி-கார்டு நிறுவனம் தென்னிந்தியாவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் ஸ்டெபிலைசர், இன்வெர்ட்டர், யுபிஎஸ் சிஸ்டம்ஸ் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய வகையிலான வாட்டர் ஹீட்டரை வி-கார்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வாட்டர் ஹீட்டரை வி-கார்டு நிறுவனத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தி பேசுகையில்,"எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் முயற்சியில் உருவான இந்த புதிய வகையிலான வாட்டர் ஹீட்டர் வாடிக்கை யாளர்களை ஈர்க்கும். வெரானோ வாட்டர் ஹீட்டரை வை-பை இணைப்பின் மூலம் ஸ்மார்ட்போனிலிருந்தே இயக்கலாம்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ