Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-சிகரெட் கர்நாடகாவில் அதிரடி தடை!


ஐ.டி நிறுவனங்கள், பி.பி.ஓக்களில் பணியாற்றும் இளைஞர்களில் சிலர் தற்போது நூதன போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இ-சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர்.

இ-சிகரெட்டுக்களை புகைப்பவர்கள் உள்ளிழுக்கும் நிக்கோட்டினின் அளவு என்பது சாதாரண புகையிலை சிகரெட்டுக்களில் இருப்பதை விட பெருமளவு குறைவு என்பதாலும், இ-சிகரெட்டுக்களை புகைப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்பதாலும் சாதாரண வகை சிகரெட்டுக்களைவிட இ-சிகரெட்டுக்களால் ஏற்படும் பாதிப்பு பெருமளவு குறைவு என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இ-சிகரெட்டை கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி அடிமையாகி உள்ளனர். இதனால் அங்கு இன்று (16.06.16) முதல் இ-சிகரெட்டைப் பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


புற்றுநோய் தடுப்பு குழு பரிந்துறையின் பேரில் இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யூடி காதர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"கர்நாடகாவில் இ-சிகரெட் பயன்பாடு குறித்து தனியார் என்ஜிஒ ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வில் ஏராளமான இளைஞர்கள் இ-சிகரெட் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது. இதனால் இன்று முதல் இ-சிகரெட் கர்நாடகாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP