Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புளூசிப் பங்குகள் சரிவால் சென்செக்ஸ் சரிந்தது!

மாலை 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (16.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் எஸ்பிஐ வங்கி இணைப்புக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. இந்த நிலையில் இன்று முதலீட்டாளர்கள் பங்குகளை லாபநோக்கில் விற்பனை, சர்வதேச மற்றும் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கம் மற்றும் புளூசிப் நிறுவன பங்குகள் சரிவு போன்ற காரணங்களால் இந்திய சந்தை இறக்கத்தில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 200.88 புள்ளிகள் சரிந்து 26,525.46 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 65.85 புள்ளிகள் சரிந்து  8140.75 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 119.05 2.85%
கெயில் 382.35 1.35%
எய்கர் மோட்டார்ஸின் 18,827.65 1.02%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,006.55 0.82%
அதானி துறைமுகங்கள் 208.50 0.72%

விலை குறைந்த பங்குகள்

பார்தி இன்ப்ராடெல் 348.20 -4.63%
ஐசிஐசிஐ வங்கி 239.05 -3.59%
மாருதி சுசூகி 4,084.10 -2.98%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,281.85 -2.43%
இன்டஸ் இன்ட் வங்கி 1,100.25 -2.07%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ