Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தை எழுச்சியால் சென்செக்ஸ் அதிகரிப்பு!

காலை 10:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (17.06.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.


நேற்றைய இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை அந்நாட்டு மத்திய வங்கி 2.2 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்தது. ஜப்பான் மத்திய வங்கி மேலும் பல ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் பழைய நிலையை தொடர முடிவெடுத்தது. இவை தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதற்கான வாக்கெடுப்பு குறித்த நிலவரங்களும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால், அன்னிய முதலீட்டு வரத்து குறைந்தது. இதுமட்டுமின்றி முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவைக் கண்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகளும் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 145.02 புள்ளிகள் உயர்ந்து 26,670.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.85 புள்ளிகள் உயர்ந்து 8175.20 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 311.75 1.93%
ஆக்சிஸ் வங்கி 533.20 1.86%
கோல் இந்தியா 312.75 1.69%
மாருதி சுசூகி 4,147.60 1.55%
ஹெச்டிஎப்சி 1,218.95 1.50%

விலை குறைந்த பங்குகள்

பார்தி இன்ப்ராடெல் 339.95 -2.37%
டாடா பவர் 75.00 -1.70%
ஆரோபிந்தோ பார்மா 730.60 -0.71%
இன்போசிஸ் 1,177.90 -0.68%
இன்டஸ் இன்ட் வங்கி 1,093.00 -0.66%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ