Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் கபாலி படத்தில் ஏர்லைன் பார்ட்னராக இணைந்தது ஏன்? ஏர் ஏசியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னராக குறைந்த விலையில் விமான சேவை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்துள்ளது.

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் வெளிநாட்டு உரிமைகள் விறுவிறுப்பாக விற்பனையாகி வரும் நிலையில், கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஏசியா இணைந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின். இந்த நிலையின் இதனை ஏர் ஏசியா நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஏர் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"கபாலி படம் வெளியாவதற்கு முன் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கபாலி படத்தின் திரைக்கதையில் விமான காட்சிகள் தேவைப்பட்டது. இதற்காக கபாலி படத்தின் சில காட்சிகள் ஏர் ஏசியா நிறுவனத்தின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏர் ஏசியா நிறுவனத்தின் விமானங்களில் ‘கபாலி’ படத்தின் புரொமோஷன்கள் இடம்பெறுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா விமான நிறுவனம் இதற்கு முன் 3, சமர், நேரம் மற்றும் மான் கராத்தே போன்ற படங்களில் ஏர்லைன் பார்ட்னராக இருந்தது. இப்போது ரஜினி நடித்துள்ள கபாலி படத்திற்கும் ஏர்லைன் பார்ட்னராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close