Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்க்கரை ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரி!


சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அதன் ஏற்றுமதி மீது 20 சதவிகிதம் சுங்க வரி மத்திய அரசு விதித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்துள்ளது.


வெளிநாட்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கவும், உள்நாட்டில் சர்க்கரை தாராளமாக கிடைக்க வழி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சர்க்கரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. எனவே இதன் விலையை கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரை ஏற்றுமதி 20 சதவிகிதம் சுங்க வரி மத்திய அரசு விதித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ