Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.34 கோடிக்கு காஸ்ட்லி அபார்ட்மெண்ட் வாங்கிய விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மும்பை நகரத்தில் உள்ள வோர்லி பகுதியில் ரூ.34 கோடிக்கு காஸ்ட்லியான சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் ஓம்கார் ரியால்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனம் சொகுசு அபார்மெண்ட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் டவர் சி குடியிருப்பில், 35 வது மாடியில் 7,171 சதுர அடி பரப்பளவைக்கொண்ட சொகுசு அபார்ட்மெண்ட்டை விராட் கோலி வாங்கியுள்ளார். இதனுடைய மதிப்பு ரூ.34 கோடி என தெரியவந்துள்ளது. இதே டவர் சி குடியிருப்பில் 29 வது மாடியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சொகுசு அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ