Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேக்ஸ் லைஃபை வாங்கியது ஹெச்டிஎஃப்சி!

இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் அதைவிட ஒரு பெரிய நிறுவனத்தினால் வாங்கப்படுவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. மைக்ரோசாஃப்ட் லிங்க்டு இன்-ஐ வாங்கிய செய்தியிலிருந்து மீள்வதற்குள் மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் மேக்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் இரண்டையும் ஹெச்டிஎஃப்சி வாங்குகிறது.

மேக்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு தங்களது இணைப்பு உடன்படிக்கை குறித்த செய்தி அறிக்கைகளை சந்தைகளுக்கு வெளியிட்டுள்ளன. இந்த இணைப்புக்குப் பிறகு மேக்ஸ் நிறுவனம் அதில் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கும் என்ற விவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த இணைப்பின் மூலம் இன்ஷூரன்ஸ் சந்தையில் மிகப்பெரிய ஜாம்பவனாக ஹெச்டிஎஃப்சி  மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அது நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 1.10 லட்சம் கோடியாக உயரும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ