Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எச்.டி.எப்.சி. லைஃப் உடன் மேக்ஸ் லைஃப் இணைகிறது!

எச்.டி.எப்.சி. ஸ்டாண்டர்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தை இணைக்கும் வகையிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.


மேக்ஸ் லைஃப் நிறுவனத்தை எச்.டி.எப்.சி. ஸ்டாண்டர்ட் லைஃப் நிறுவனத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில், எச்.டி.எப்.சி. லைஃப், மேக்ஸ் லைஃப் மற்றும் மேக்ஸ் பைனான்ஸியல் நிறுவனங்களின் இயக்குநர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த இணைப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வரும்போது, எச்.டி.எப்.சி. ஸ்டாண்டர்ட் லைஃப் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் ரூ.26,000 கோடியாகவும், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். இந்திய காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய இணைப்பு நடவடிக்கையின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ