Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி என்ஆர்ஐ-க்கள் ஆன்லைனில் என்பிஎஸ்-ல் சேரலாம்!

என்ஆர்ஐ-க்கள் தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் கணக்கு தொடங்க இனி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று ஆதார் அல்லது பான் கார்டு போன்ற உரிய ஆவணங்களை கடிதம் மூலமாக சமர்பித்து என்பிஎஸ்-ன் கீழ் கணக்கு தொடங்கலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இனி என்ஆர்ஐ-க்கள் தங்களுடைய என்ஆர்இ, என்ஆர்ஒ அல்லது எஃப்சிஎன்ஆர் கணக்குகள் மூலமாக ஆதார் அல்லது பான் கார்டு எண்களை வழங்கி ஆன்லைன் மூலமாகவே தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்பிஎஸ்-ல் கணக்கு தொடங்கி அதில் செலுத்தப்படும் தொகை முதிர்ச்சி காலம் முடிவடைந்தபின்னர் அந்த பணம் என்ஆர்ஐ-க்களின் என்ஆர்ஒ கணக்குகளில் மட்டுமே செலுத்தப்படும் என நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ