Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜன் முடிவால் சந்தை சரிந்தது!

காலை 1015 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (20.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் தொடங்கி இப்போது எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகம் தொடங்கியது. இதற்கு காரணம் ரகுராம் ராஜன் 2 வது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகிக்க விரும்பவில்லை என்ற அறிவிப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான சூழல் போன்ற காரணங்களால் சந்தை இறக்கத்தில் தொடங்கி வர்த்தகமானது. இந்த நிலையில் காலை 10:15 மணி நிலவரத்தில் சந்தை மீண்டும் ஏற்றம் பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 70.48 புள்ளிகள் உயர்ந்து 26,697.67 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.10 புள்ளிகள் உயர்ந்து 8186.55 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹெச்சிஎல் டெக் 774.45 2.76%
டெக் மஹிந்திரா 543.50 1.54%
லார்சன் 1,502.50 1.50%
டிசிஎஸ் 2,635.40 1.26%
இன்போசிஸ் 1,192.60 1.11%

விலை குறைந்த பங்குகள்

ஆக்சிஸ் வங்கி 519.75 -1.36%
ஏஷியன் பெயின்ட்ஸ் 987.60 -1.20%
லூபின் 1,448.55 -1.06%
பார்தி Infratel 335.40 -0.96%
அரவிந்தர் ஃபார்ம் 722.40 -0.74%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ