Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்டிஐ அறிவிப்பால் சென்செக்ஸ் 241 புள்ளிகள் உயர்வு!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (20.06.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகம் தொடங்கியது. ரகுராம் ராஜன் 2 வது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகிக்க விரும்பவில்லை என்ற அறிவிப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான சூழல் போன்ற காரணங்களால் சந்தை சில நிமிடங்களுக்கு இறக்கத்தில் இருந்தது.
 
அதன் பின் வர்த்தகம் மீண்டும் அதிகரித்து சந்தை எழுச்சியுடன் காணப்பட்டது. பார்மா துறைகளில் 74 சதவிகிதமும், அரசு விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைகளில் 100% அன்னிய நேரடி முதலீடுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்காரணமாகவும் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 241.01 புள்ளிகள் உயர்ந்து 26,866.92 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 68.30 புள்ளிகள் உயர்ந்து 8238.50 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 482.05 3.80%
டாடா ஸ்டீல் 336.25 3.32%
அம்புஜா சிமென்ட்ஸ் 242.00 2.59%
டாடா மோட்டார்ஸ் (டி) 320.15 2.56%
இன்போசிஸ் 1,208.75 2.48%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 522.45 -0.84%
ஏஷியன் பெயின்ட்ஸ் 991.50 -0.81%
எய்கர் மோட்டார்ஸின் 18,660.60 -0.63%
ஐடிசி 358.05 -0.50%
சன் பார்மா 739.85 -0.45%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close