Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தையால் இந்திய சந்தை தடுமாற்றம்!

காலை 10:10 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (21.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

நேற்றைய வர்த்தகத்தின்போது மத்திய அரசு, விமானப் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், ராணுவம், மருந்து உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்துவதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான சூழல் நிலவுவதால் ஆசிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. இது இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 64.25 புள்ளிகள் சரிந்து 26,804.66 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.30 புள்ளிகள்  சரிந்து 8218.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 123.35 1.90%
ஓஎன்ஜிசி 216.25 1.12%
அதானி துறைமுகங்கள் 209.10 1.11%
எம் அண்ட் எம் 1,364.80 1.03%
பஜாஜ் ஆட்டோ 2,642.00 0.92%

விலை குறைந்த பங்குகள்

அம்புஜா சிமென்ட்ஸ் 238.25 -1.55%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,330.20 -1.17%
பி.எச்.இ.எல் 122.60 -1.05%
லார்சன் 1,492.00 -1.00%
இன்டஸ் இன்ட் வங்கி 1,093.10 -0.95%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ